Mohanlal
MohanlalDrishyam 3

த்ரிஷ்யம் 3 ஏப்ரல் 2ல் ரிலீஸ் இல்லை... ரிலீசுக்கு சிறப்பான நாளை தேர்வு செய்த குழு! | Drishyam 3

இந்தப் படம் ஏப்ரல் 2ம் தேதி வெளியாகும் என முன்பு அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்திய சினிமாவின் முக்கிய வெளிநாட்டுச் சந்தையான வளைகுடா நாடுகளில் இப்படத்தை வெளியிட முடியாத சூழல் உருவாகியுள்ளது.
Published on

மோகன்லால் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கி மிகப்பெரிய ஹிட்டான படம் `த்ரிஷ்யம்'. இதன் வெற்றி காரணமாக கன்னடம், தெலுங்கு, தமிழ், இந்தி சின்ஹாலா, சைனீஸ் போன்ற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் பெருவெற்றி அடைந்தது. இதனைத் தொடர்ந்து 2021ம் `த்ரிஷ்யம் 2' படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி அதுவும் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. இப்போது த்ரிஷ்யம் படத்தின் மூன்றாவது பாகம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.

த்ரிஷ்யம் 2
த்ரிஷ்யம் 2Pt web

இந்தப் படம் ஏப்ரல் 2ம் தேதி வெளியாகும் என முன்பு அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்திய சினிமாவின் முக்கிய வெளிநாட்டுச் சந்தையான வளைகுடா நாடுகளில் இப்படத்தை வெளியிட முடியாத சூழல் உருவாகியுள்ளது. போரினால் மேற்கு ஆசியாவில் நிலவும் பதட்டமான சூழல் தான் இதற்கு காரணம். எனவே இப்படத்தை ஏப்ரல் 2லிருந்து தள்ளி வைப்பார்கள் என்ற தகவல் வெளியானது. இப்போது அதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இப்படம் மே 21ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அது மோகன்லாலின் பிறந்தநாள் என்பது கூடுதல் சிறப்பு.

மோகன்லால், ஜீத்து ஜோசப் தவிர இந்த உலகத்தில் பிரபலமான மீனா, அன்சிபா ஹாசன், எஸ்தர் அனில், முரளி கோபி மற்றும் கே.பி. கணேஷ் குமார் ஆகியோர் தங்களது கதாபாத்திரங்களில் மீண்டும் நடிக்கின்றனர். இப்படத்தின் இந்தி ரீமேக்கும் அஜய் தேவ்கன் நடிப்பில் தயாராகி வருகிறது. இந்திப் பதிப்பு அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாக உள்ளது.

Mohanlal
"எனக்கு கால் உடைஞ்சா படம் ஹிட்!" - `இதுதாண்டா போலீஸ்' ராஜசேகர் கலகல | Rajashekhar | Biker
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com