நேரடியாக ஓடிடியில் வெளியாகும் மோகன்லால்-பிரித்விராஜின் ‘ப்ரோ டேடி’: அதிகாரபூர்வ அறிவிப்பு

நேரடியாக ஓடிடியில் வெளியாகும் மோகன்லால்-பிரித்விராஜின் ‘ப்ரோ டேடி’: அதிகாரபூர்வ அறிவிப்பு
நேரடியாக ஓடிடியில் வெளியாகும் மோகன்லால்-பிரித்விராஜின் ‘ப்ரோ டேடி’: அதிகாரபூர்வ அறிவிப்பு

பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் ‘ப்ரோ டேடி’ படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது.

நடிகர் பிரித்விராஜ் இரண்டாவதாக இயக்கியுள்ள ‘ப்ரோ டேடி’ படத்தில் மோகன்லால் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நகைச்சுவைக் கொண்ட குடும்பப் படமாக உருவாகிவரும் இப்படத்தில் மோகன்லாலுடன் பிரித்விராஜ், கல்யாணி பிரியதர்ஷன், மீனா உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். கடந்த 2019 ஆம் ஆண்டு பிரித்விராஜ் இயக்குநராக அறிமுகமான ‘லூசிஃபர்’ வசூலைக் குவித்தது. தற்போது இரண்டாவது முறையாகவும் மோகன்லாலுடன் இணைந்துள்ளதால் ‘ப்ரோ டேடி’ படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

இந்த நிலையில், இன்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு ‘ப்ரோ டேடி’ நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் விரைவில் வெளியாகவுள்ளது என்று நடிகர் பிரித்விராஜ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான ‘குருதி’ அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com