\
புதிய படத்தில் மீண்டும் இணையும் மோகன்லால் - ஜீத்து ஜோசப்

புதிய படத்தில் மீண்டும் இணையும் மோகன்லால் - ஜீத்து ஜோசப்

புதிய படத்தில் மீண்டும் இணையும் மோகன்லால் - ஜீத்து ஜோசப்
Published on

மோகன்லால் - ஜீத்து ஜோசப் கூட்டணியில் உருவாகவுள்ள அடுத்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

மோகன்லால் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கி மலையாளத்தில் வெளியாகி பல மாநிலங்களிலும் ப்ளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது த்ரிஷ்யம் திரைப்படம். அதன் வெற்றியைத் தொடர்ந்து இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜார்ஜ் குட்டியை மீண்டும் நம் கண்முன் நிறுத்திய த்ரிஷ்யம் - 2 திரைப்படம், ஓடிடியில் வெளியாகி பலரின் வரவேற்பையும் பாராட்டுக்களையும் பெற்றது.

த்ரிஷ்யம் படத்தின் அடுத்த பாகம் குறித்த பேச்சுக்கள் வெளியாகிக்கொண்டிருக்கும் இந்நேரத்தில் மீண்டும் ஜீத்து - மோகன்லால் கூட்டணியில் உருவாகவுள்ள புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. '12th man'எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் திரைப்படத்தை ஆன்டனி பெரும்பாவூர் தயாரிக்கிறார். கொரோனா கட்டுப்பாடுகள் முடிவுக்கு வந்தபின் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே ஜீத்து - மோகன்லால் கூட்டணியில் உருவாகிவரும் ‘ராம்’ திரைப்படத்தின் அடுத்தக்கட்ட படபிடிப்பு லண்டனில் நடைபெற இருக்கிறது. பிரித்விராஜ் - மோகன்லால் கூட்டணியில் உருவாகவுள்ள திரைப்படத்திற்கு முன்பே, ‘12th man' திரைப்படம் எடுக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com