\
60 படங்களை நிராகரித்தார் மோகன் ராஜா!

60 படங்களை நிராகரித்தார் மோகன் ராஜா!

60 படங்களை நிராகரித்தார் மோகன் ராஜா!
Published on

‘வேலைக்காரன்’ ரிலீஸுக்காக காத்திருக்கும் மோகன் ராஜா 60 படங்களை இதுவரை நிராகரித்து இருப்பதாகக் கூறி இருக்கிறார்.

‘தனி ஒருவன்’ மூலம் தனி கவனத்தை தக்க வைத்தவர் மோகன் ராஜா. அவர் இதுவரை தன்னை தேடி வந்த 60 படங்களை வேண்டாம் என சொல்லி இருக்கிறார். தரமான படங்களை மட்டுமே தர வேண்டும் என்ற ஆசையால் இந்த வாய்ப்புக்களை வேண்டாம் என அவர் சொல்ல நேர்ந்து என்றும் பணம் மட்டுமே சம்பாதிக்க வேண்டும் என்றால் இந்த அறுபது படங்களையும் நான் ஏற்றுக் கொண்டிருப்பேன் என்றும் கூறி இருக்கிறார்.

அதோடு ‘தனி ஒருவன்’ படத்தை பார்த்துவிட்டு சிவகார்த்திகேயன் அவரை தொடர்பு கொண்டு ‘உங்க கதைக்குள் நான் இருக்க வேண்டும். அப்படி ஒரு கதை இருந்தால் நான் நடிக்க தயார்’ என்று கூறியிருக்கிறார். ஆகவேதான் அவரோடு ஒரு படம் செய்ய தான் முடிவு செய்ததாகவும் கூறியுள்ளார். இந்தப் படத்திற்காக குடிசைப் பகுதியை உருவாக்க பத்து லாரி நிஜக் குப்பைகளை கொண்டு வந்து கொட்டி செட் போட்டதாக ஒரு விஷயத்தை பகிரிந்து கொண்டிருக்கிறார் இயக்குநர் மோகன் ராஜா.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com