சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார்!
சூர்யா நடிக்கும் ’சூரரைப் போற்று’ படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மோகன் பாபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
மாதவன் நடித்த ‘இறுதிச்சுற்று’ படத்தை அடுத்து சுதா கொங்கரா இயக்கும் படம், ’சூரரைப் போற்று’. சூர்யா ஹீரோவாக நடிக்கிறார். அவர் ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். மற்றும் ஜாக்கி ஷெராப் உட்பட பலர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். நிக்கேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவு செய்கிறார். சூர்யாவின் 2 டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் சிக்யா என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன.
இந்தியாவில் முதல் பட்ஜெட் விமானப் பயணத்தை உருவாக்கிய ’ஏர் டெக்கான்’ உரிமையாளர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப் படுத்தி இந்தப்படம் தயாராகிறது. வாழ்க்கை வரலாறு படமாக இல்லாமல், அவர் செய்த நல்ல விஷயங்களை மட்டும் வைத்து படம் உருவாவதாகக் கூறப்படுகிறது.
இந்தப் படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். 80-களில் தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந் தவர் இவர். தமிழில், கமல்ஹாசனின் ’குரு’, ரஜினியின், ’அன்னை ஓர் ஆலயம்’ உட்பட சுமார் 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
ரஜினிகாந்தின் நண்பரான இவர், ’சூரரைப் போற்று’ படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வருகிறார். இதற்கு பின் தமிழில் தொடர்ந்து நடிக்க அவர் முடிவு செய்துள்ளார்.