யார் இந்த "செக்கச் சிவந்த வானம்" டயானா எரப்பா?

யார் இந்த "செக்கச் சிவந்த வானம்" டயானா எரப்பா?

யார் இந்த "செக்கச் சிவந்த வானம்" டயானா எரப்பா?
Published on

தமிழ் திரையுலகில் அறிமுகமாகும் பிரபல மாடல் அழகி டயானா எரப்பா பற்றிய சில சுவாரஸ்யமான செய்திகள் வெளியாகி உள்ளன. 

இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் விரைவில் வெளிவரவிருக்கும் "செக்கச் சிவந்த வானம்" படத்தில் நடிகர் சிம்புவிற்கு ஜோடியாக நடித்திருப்பவர் நடிகை டயானா எரப்பா.  

கர்நாடகத்திலுள்ள கூர்க்கில் பிறந்த இவர் 2011ம் ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்தியா போட்டியில் முதல் 10 போட்டியாளர்களில் ஒருவராக வந்தார். பின்பு 2012 இல் உலகின் மிகவும் மதிப்புமிக்க சர்வதேச மாடலிங் போட்டியான ஷாங்காய் எலைட் மாடல் லுக் போட்டியில் இந்திய நாட்டின் சார்பாக பங்கேற்றார்.  

அதன் பின் கிங்ஃபிஷர் காலெண்டர் 2015 மற்றும் 2017, லாக்மே பேஷன் வீக், அமேசான் பேஷன் வீக், கௌச்சர் வீக் போன்ற புகழ்பெற்ற பேஷன் பத்திரிகைகளில் இடம்பெற்றார். மேலும் சர்வதேச பேஷன் பத்திரிகைகளான வோக், எல்லி, ஹார்ப்பர்ஸ் பஜார், காஸ்மோபொலிட்டன் மற்றும் ஜி.கியூ போன்றவைகளில் இவரது புகைப்படங்கள் இடம்பெற்றன.  மேலும் பல முன்னனி டிசைனர்களின் விளம்பர மாடலாக நடித்துள்ளார். 

பிரபல மாடலான டயானா எரப்பா, பிரபல இயக்குனரான மணிரத்னத்தின் படத்தில் நடித்திருக்கிறார். இதனால் சினிமா ரசிகர்களின் இடையே ஒரு எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com