’பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனுஸ்ரீ பங்கேற்றால்..?’ ராஜ் தாக்கரே திடீர் எச்சரிக்கை!

’பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனுஸ்ரீ பங்கேற்றால்..?’ ராஜ் தாக்கரே திடீர் எச்சரிக்கை!

’பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனுஸ்ரீ பங்கேற்றால்..?’ ராஜ் தாக்கரே திடீர் எச்சரிக்கை!
Published on

’பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் நடிகை தனுஸ்ரீ தத்தாவை பங்கேற்க வைத்தால் கடும் விளைவு களைச் சந்திக்க நேரிடும் என்று ராஜ் தாக்கரேவின் மகாராஷ்ட்ர நவநிர்மாண் சேனா கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழில் ’பொம்மலாட்டம்’, ’காலா’ படங்களில் நடித்தவர் இந்தி நடிகர் நானா படேகர். இவர் மீது, நடிகை தனுஸ்ரீ தத்தா பாலியல் குற்றச்சாட்டை கூறியிருந்தார். இவர், தமிழில் ’தீராத விளையாட்டு பிள்ளை’ படத்தில் நடித்தவர். இது பரபரப்பை கிளப்பியது.

இதை அந்தப் படத்தில் பணியாற்றிய நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா மறுத்திருந்தார். இவர், தமிழில் ஜீவாவின் ’ரவுத்திரம்’ படத்தில் நடித்தவர்.‘கணேஷ் பொய்யர். அவர் இரண்டு முகம் கொண்ட மனிதர். பத்துவருடத்துக்கு முன் எனக்கு நடந்த அந்த பாலியல் தொல்லை சம்பவத்துக்கு உடந்தையாக இருந்தவர் அவர்’ என்று அவருக்கு பதில் கூறியிருந்தார் தனுஸ்ரீ.

தனுஸ்ரீயின் புகாரை மறுத்துள்ள நானா படேகர், இது பொய்யான புகார். அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லை என்றால் வழக்குத் தொடர் வேன் என்று கூறியிருந்தார். அவர் வழக்கறிஞர் ராஜேந்திரா சிரோட்கர் கடந்த வெள்ளிக்கிழமை அவருக்கு நோட்டீஸ் அனுப்பியதாகத் தெரி வித்தார்.

தனுஸ்ரீக்கு ஆதரவாக பிரபலமான இந்தி நடிகைகள், டிவிங்கிள் கண்ணா, பிரியங்கா சோப்ரா, சோனம் கபூர், பரினீதி சோப்ரா, ஸ்வாரா பாஸ்கர், ரிச்சா சதா உள்ளிட்ட சிலர் கருத்துத் தெரிவித்திருந்தனர். 

இந்நிலையில் நானா படேகர் அனுப்பிய வக்கீல் நோட்டீஸ் பற்றி தனுஸ்ரீயிடம் கேட்டபோது, ‘இதுவரை எனக்கு எந்த நோட்டீஸும் வரவில்லை. இதுபோன்ற அச்சுறுத்தல்கள், என்னை போன்று புகார் சொல்ல முன் வரும் நடிகைகளை பயமுறுத்தத்தான். பாலியல் தொல்லைக்கு ஆளான நடி கைகள் இதுபோன்ற மிரட்டல் தந்திரங்கள் பற்றி கவலைப்படத் தேவையில்லை. இந்த தேசம் ஆதரவாக இருக்கும்’ என்று கூறியிருந்தார். 
அதோடு மாராஷ்ட்ரா நவநிர்மாண் சேனா கட்சியினர் தமக்கு மிரட்டில் விடுப்பதாகவும் தனுஸ்ரீ கூறியிருந்தார்.

இந்நிலையில் சல்மான் கான் தொகுத்து வழங்கும் ’பிக்பாஸ் சீசன் 12’-ல் தனுஸ்ரீ, பங்கேற்க இருப்பதாகவும் அதில் அவர் கலந்துகொண்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்ட்ரா நவநிர்மாண் சேனா கட்சி எச்சரித் துள்ளது. 

இது தொடர்பாக அந்தக் கட்சி, பிக்பாஸ் 12 நிகழ்ச்சியை நடத்தும் தயாரிப்பாளர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அந்த கடிதத்தில் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இந்த எச்சரிக்கையை அடுத்து மும்பை போலீஸ், தனுஸ்ரீ-க்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பை வழங்கியுள்ளது.


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com