’மின்னல் முரளி’ சாதனை: நெட்ஃப்ளிக்ஸில் ‘டாப் 10’; ஐஎம்டிபி மலையாளப் படங்களில் இரண்டாமிடம்

’மின்னல் முரளி’ சாதனை: நெட்ஃப்ளிக்ஸில் ‘டாப் 10’; ஐஎம்டிபி மலையாளப் படங்களில் இரண்டாமிடம்

’மின்னல் முரளி’ சாதனை: நெட்ஃப்ளிக்ஸில் ‘டாப் 10’; ஐஎம்டிபி மலையாளப் படங்களில் இரண்டாமிடம்
Published on

இந்த ஆண்டு வெளியான மலையாளப் படங்களில் ஐஎம்டிபி தரவரிசைப் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது நடிகர் டொவினோ தாமஸின் ‘மின்னல் முரளி’.

’காணே காணே’ படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ‘மின்னல் முரளி’ வெளியாகியுள்ளது. சூப்பர் ஹீரோவாக நடிப்பில் ‘மாஸ்’ காட்டியுள்ளார் டொவினோ தாமஸ். குரு சோமசுந்தரம், ஹரிஶ்ரீ அசோகன் மற்றும் அஜு வர்கீஸ் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மலையாள மொழியில் உருவாகியுள்ள இப்படம் தமிழ்,தெலுங்கு,கன்னடம்,இந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகி அனைத்து மொழிகளிலும் ரசிககர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் உலகளவில் ட்ரெண்டிங்கில் ஆங்கிலம் மொழியில் வெளியாகாத டாப் 10 படங்களில் ‘மின்னல் முரளி’ இடம்பிடித்துள்ளதோடு ஐஎம்டிபி தரவரிசைப் பட்டியலில் 2021 ஆம் ஆண்டு வெளியானப் படங்களில் 8.5 புள்ளிகளைப் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது.

முதலிடத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான ‘த்ரிஷ்யம் 2’ உள்ளது. இதனை நடிகர் டொவினோ தாமஸ் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் உற்சாகமுடன் பகிர்ந்திருக்கிறார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com