\
‘மன்னிக்கும்போது கடவுள் ஆகுறோம்’ - வெளியானது விஜய் சேதுபதி, சந்தீப் கிஷனின் மைக்கேல் டீசர்

‘மன்னிக்கும்போது கடவுள் ஆகுறோம்’ - வெளியானது விஜய் சேதுபதி, சந்தீப் கிஷனின் மைக்கேல் டீசர்

‘மன்னிக்கும்போது கடவுள் ஆகுறோம்’ - வெளியானது விஜய் சேதுபதி, சந்தீப் கிஷனின் மைக்கேல் டீசர்
Published on: 

சந்தீப் கிஷன், விஜய் சேதுபதி மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் நடித்துள்ள ‘மைக்கேல்’ படத்தில் டீசர் இன்று வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

‘புரியாத புதிர்’, ‘இஸ்பேட் ராஜாவும், இதய ராணியும்’, ‘யாருக்கும் அஞ்சேல்’ உள்ளிட்டப் படங்களை இயக்கியவர் ரஞ்சித் ஜெயக்கொடி. இவர் தற்போது தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரும், ‘மாநகரம்’ படத்தின் கதாநாயகனுமான சந்தீப் கிஷனை வைத்து பான் இந்தியா படத்தை இயக்கி வந்தார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். மேலும் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் வில்லனாக நடித்துள்ளார். வரலக்ஷமி சரத்குமார், அனசுயா, திவ்யன்ஷா ஆகியோர் நடித்துள்ளனர்.

சாம் சிஎஸ். இசையமைத்துள்ளார். பரத் சௌத்ரி மற்றும் புஷ்கர் ராம் மோகன் ராவ் இணைந்து தயாரித்துள்ளனர். கிரண் கௌசிக் ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. டீசரை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வாழ்த்துள்ளார். இந்த டீசரில் மிரட்டலான இசையில், கேங்ஸ்டர் கதையாக படம் உருவாகியுள்ளது தெரியவந்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com