தற்கொலைக்கு முயன்றாரா மைக்கேல் ஜாக்சன் மகள்?

தற்கொலைக்கு முயன்றாரா மைக்கேல் ஜாக்சன் மகள்?

தற்கொலைக்கு முயன்றாரா மைக்கேல் ஜாக்சன் மகள்?
Published on

மறைந்த பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் மகள் தற்கொலைக்கு முயன்றதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் அவர் இதை மறுத்துள்ளார்.

பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன். 2009 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள தனது வீட்டில் மாரடைப்பு காரணமாக இறந்தார். இவருக்கு பாரிஸ் ஜாக்சன் என்ற மகளும், ஜோசப் ஜாக்சன் மற்றும் பிரின்ஸ் ஜாக்சன் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர்.

சமீபத்தில் வெளியான, லீவிங் நெவர்லேண்ட் (Leaving Neverland) என்ற ஆவணப்படம் மைக்கேல் ஜாக்சன், சிறுவர்களைத் தவறாகப் பயன்படுத் தியதாகப் புகார் கூறியிருந்தது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் மைக்கேல் ஜாக்சன் மகளும் பிரபல மாடலுமான, பாரிஸ் ஜாக்சன் மன உளைச்சலில் இருந்தார் என்று கூறப்படுகிறது. 

இதையடுத்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள தனது வீட்டில், கை நரம்பை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாகவும் அவர் ஆம்பு லன்ஸில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட் டதாகச் செய்திகள் வெளியாயின. இதற்கு முன்பும் சிலமுறை தற்கொலைக்கு முயன்றுள்ளார் பாரிஸ் ஜாக்சன். 

இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அவரது ரசிகர்கள் இதுபற்றி சமூக வலைத்தளங்களில் தங்களின் கவலையைத் தெரிவித்திருந்தனர். இந்நிலை யில் இதை மறுத்துள்ள அவர், ’பொய்’ என்று ட்விட் செய்துள்ளார். ஆனால் மேலதிக விவரங்கள் எதையும் அவர் தெரிவிக்கவில்லை. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com