எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது.
காமராஜ், முதல்வர் மகாத்மா படங்களை தயாரித்து ரமணா கம்யூனிகேஷன்ஸ் மூலம் வெளியிட்ட பாலகிருஷ்ணன் இயக்குகிறார்.
படம் பற்றி அவர் கூறும்போது, ’எம்.ஜி.ஆரின் வரலாறு, அவரது பாய்ஸ் நாடக கம்பெனி காலங்களில் ஆரம்பித்து, அவரின் திரையுலக வாழ்க்கை, அண்ணாவுடன் சந்திப்பு, அரசியல் வாழ்க்கை, பின் தமிழக முதல்வராக உயர்ந்தது வரை படமாக்கப்படுகிறது. அவரின் நூற்றாண்டு விழாவிற்கு பெருமை சேர்ப்பதாக இந்தப் படம் அமையும். நவம்பர் 8-ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி படப்பிடிப்பைத் துவக்கி வைக்கிறார். எம்.ஜி.ஆராக இரண்டு பேர் நடிக்கிறார்கள். நாடக காலகட்ட வாழ்க்கையில் ஒருவரும் சினிமா, அரசியல் வாழ்க்கையில் மற்றொருவரும் நடிக்கிறார்கள். அவர்கள் யார் என்பதை விரைவில் அறிவிப்பேன். எம்.ஜி.ஆர் பிறந்த நாளான ஜனவரி 17-ம் தேதி டீசரை வெளியிட முடிவு செய்துள்ளேன். படம் ஏப்ரலில் ரிலீஸ் ஆகும்’ என்றார்.