\
எம்ஜிஆர் பிறந்தநாள்: நடிகர் சங்கம் மரியாதை

எம்ஜிஆர் பிறந்தநாள்: நடிகர் சங்கம் மரியாதை

எம்ஜிஆர் பிறந்தநாள்: நடிகர் சங்கம் மரியாதை
Published on

எம்ஜிஆரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் திருவுருவப் படத்திற்கு நடிகர் சங்கம் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 101-ஆவது பிறந்த நாள் தமிழகம் முழுவதும் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ‘சண்டைக்கோழி-2’ படத்தில் தற்போது பிஸியாக நடித்து வரும் விஷால் அதன் படப்பிடிப்பு தளத்தில் எம்ஜிஆரின் திருவுருவப் படத்திற்கு நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பாக சங்க வளாகத்தில் எம்ஜிஆரின் திருவுருவப் புகைப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தபட்டது. இந்நிகழ்ச்சியில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நியமன செயற்குழு உறுப்பினர்கள் மனோபாலா, காஜா மொய்தீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com