ஸ்டோன் பெஞ்ச் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான மேயாதமான் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரியில் இன்று மாலை 5 மணி அளவில் நடைபெற உள்ளது என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறித்துள்ளனர்.
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் கார்த்திகேயன் சந்தானம் தயாரிக்கும் திரைப்படம் மேயாத மான். இது வடசென்னையில் நடக்கும் காதல் கதையை பின்புலமாக கொண்டு உருவாக்கப்படுள்ளது. இதில் வைபவ், ப்ரியா பவானிசங்கர், விவேக் பிரசன்னா, இந்துஜா என பலர் நடித்துள்ளனர். இதை ரத்னகுமார் இயக்கியுள்ளார். முதன்முறையாக சந்தோஷ் நாராயணன் மற்றும் திரைப்பாடகர் பிரதீப் குமார் இணைந்து இசையமைத்துள்ளனர்.
மொத்தம் 7 பாடல்களில் ஏற்கெனவே மூன்று பாடல்கள் வெளியாகிவிட்டன. அந்தோணி தாசன் பாடிய தங்கச்சி பாடல் முதலில் வெளியிடப்பட்டது. இரண்டாவது என்ன நான் செய்வேன் பாடல் வெளியிடப்பட்டது. மூன்றாவதாக சந்தோஷ் நாராயணன் பாடிய அடியே எஸ்.மது பாடல் வெளியிடப்பட்டது. மீதமுள்ள பாடல்கள் இன்று ரசிகர்கள் மத்தியில் வெளியிடப்பட உள்ளன.