சென்னையில் மெக்ஸிகன் திரைப்பட விஷா தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளனர்.
பல்வேறு கலாச்சாரங்களை விளக்கும் விதமாக திரைப்பட விழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் தொடக்கமாக மெக்ஸிகோவின் கலாச்சாரத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பொருட்டு சென்னையில் மெக்ஸிகன் திரைப்பட விழா நடைபெற உள்ளது. அதன்படி செப்டம்பர் 21 முதல் 23 வரை இந்த விழா சென்னை ரஷ்யன் கலாச்சார மையத்தில் நடைபெறுகிறது. தினமும் மாலை ஆறு மணிக்கு படங்கள் திரையிடப்படுகின்றன. தினமும் இரண்டு படங்கள் வீதம் திரையிடப்படுகின்றன. ஆக, மொத்தம் ஆறு படங்கள் வரை திரையில் காணலாம் என அதன் செயலாளர் இ.தங்கராஜ் குறிப்பிட்டுள்ளார்.