சிபிஎஸ்இ புத்தகத்தில் விஜய்!: விழாக் கோலத்தில் ரசிகர்கள்
சிபிஎஸ்இ பாடப் புத்தகத்தில் விஜய் படம் இடம்பெறுள்ளதை கண்டு அவரது ரசிகர்கள் மகிழ்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.
’மெர்சல்’ படத்தில் மருத்துவத்துறை சம்பந்தமான விருது வழங்கும் விழாக் காட்சி ஒன்று இடம்பெற்றிருக்கும். வெளிநாட்டில் நடைபெற இருக்கும் அந்த விழாவுக்கு விஜய் பட்டு வேஷ்டி, பட்டு சட்டையில் கிளம்புவார். அதற்காக அவர் விமான நிலைய செல்லும் போது அதிகாரிகள் அவரை உள்ளாடையுடன் சோதனை செய்வார்கள். அதன் பின் அவரை அறிந்த அதிகாரிகள் தவறை புரிந்து கொண்டு மதிப்பளிப்பார்கள். தனக்கு நடந்த அவமதிப்பிற்காக விஜய் தமிழர்களின் உடையான வேட்டி சட்டை மதிப்புகளை எடுத்து விளக்குவார். அந்தப் புகைப்படம்தான் சிபிஎஸ்இ பாடப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. பாடத்தில் வரும் தகவலுக்காக அவரை பாடநூல் தயாரிப்புக் குழு ஒரு மாடலாக பயன்படுத்தி இருக்கிறது.
மூன்றாம் வகுப்பு பாடத்திற்கான பாடநூலில் இந்தப் புகைப்படம் எடுத்தாளப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை பற்றிய விளக்கத்திற்காகவும் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையை விளக்கிக் காட்டுவதற்காகவும் இது அச்சிடப்பட்டுள்ளது. இந்த செய்தி தற்சமயம் வெளி வந்துள்ளது. அதனை கண்டு அவரது ரசிகர்கள் விழாக் கோலத்தில் குதித்து கொண்டாடி வருகின்றனர்.