\
மெர்சல் படத்திற்கு அதிக கட்டணம்: காவல் ஆணையரிடம் புகார்

மெர்சல் படத்திற்கு அதிக கட்டணம்: காவல் ஆணையரிடம் புகார்

மெர்சல் படத்திற்கு அதிக கட்டணம்: காவல் ஆணையரிடம் புகார்
Published on

மெர்சல் படத்திற்கு அதிக அளவில் டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுவதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

மெர்சல் தீபாவளி பண்டிகைக்கு வெளியாக உள்ளது. அதற்கான டிக்கெட்டுகள் ஆன் லைனில் தொடங்கப்பட்ட உடன் விற்று தீர்ந்துள்ளன. இந்நிலையில் இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் மெர்சல் படத்திற்கு அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர். அதில், மெர்சல் படத்திற்கு அதிக கட்டணம் வசூல் செய்யும் திரையரங்கு உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் புகார் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com