\
விஜய் கொடுத்த மெர்சல் விருந்து

விஜய் கொடுத்த மெர்சல் விருந்து

விஜய் கொடுத்த மெர்சல் விருந்து
Published on

மெர்சல் திரைப்படம் மிக பிரமாண்டமான வெற்றியை அடைந்ததையடுத்து படக்குழுவினரை தனது வீட்டிற்கு அழைத்து நடிகர் விஜய் விருந்தளித்துள்ளார். 

சர்ச்சை மற்றும் வரவேற்பு என இரட்டை குதிரையில் சவாரி செய்தது விஜய் நடித்த மெர்சல் திரைப்படம். பாஜகவினர் அதனை கடுமையாக தாக்க அதனையடுத்து காங் துணை தலைவர் ராகுல் காந்தி அதனை பலமாக ஆதரித்தார். தமிழர்களின் கலை வெளிப்பாட்டில் தலையிடக்கூடாது என்று கூறியிருந்தார். அதனை தொடர்ந்து விஜய் அனைவருக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் நடிகர் விஜய் வெற்றியை கொண்டாடும் வகையில் படக்குழுவினருக்கு விருந்தளித்துள்ளார். அதில் ஏ.ஆர்.ரஹ்மான், அட்லி, எஸ்.ஜே.சூர்யா, பாடலாசிரியர் விவேக் என பலர் கலந்து கொண்டுள்ளனர். அதற்கான ஒரே ஒரு புகைப்படம் மட்டும் சமூக வலைதளமான ட்விட்டரில் வெளியாகி உள்ளது. புகைப்படம் வந்த வேகத்தில் #MersalSuccessParty ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்ட்டில் இடம் பிடித்துள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com