தமிழாலே ஒன்னானோம் மாறாது எந்நாளும்...அசத்திய மெர்சல்
மெர்சல் படத்தின் சிங்கிள் ட்ராக்கான ‘ஆளப்போறான் தமிழன்’ டீசர் வெளியாகி அனைவரின் எதிர்பார்ப்பையும் எகிற வைத்துள்ளது.
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மெர்சல் படத்தின் சிங்கிள் ட்ராக்கான ‘ஆளப்போறான் தமிழன்’ டீசர் சரியாக நள்ளிரவு 12 மணிக்கு வெளியிடப்பட்டது. வெளியானது முதலே ஏராளமானோர் இந்த டீசரை பார்வையிட்டு வருகின்றனர். பாடலில் ‘தமிழாலே ஒன்னானோம்... மாறாது எந்நாளும்’ என்ற வரிகள் அனைவரிடம் நல்ல வரவேற்பை பெற்று பாடலுக்கான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. ஏற்கனவே மெர்சல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜல்லிக்கட்டுடன் தொடர்புள்ளது போல் காட்சியமைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ‘தமிழாலே ஒன்னானோம், மாறாது எந்நாளும்’ என்ற வரிகள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழர்கள் அனைவரும் ஒன்றானதை குறிப்பது போல் அமைந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது.
டீசர் வெளியானது முதலே எண்ணிக்கைகளையும், லைக்ஸ்-களையும் தெறிக்க விட்டிருக்கின்றனர் விஜய் ரசிகர்கள். வெளியான 10 மணி நேரத்தில் 1 மில்லியன் பார்வையாளர்களையும் ஒரு லட்சத்து இருபதாயிரம் லைக்ஸ்-களையும் பெற்று சாதனை படைத்துள்ளது.
இன்று மாலை 5 மணிக்கு ‘ஆளப்போறான் தமிழன்’ பாடல் வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.