மெர்சல் படத்தின் சிங்கிள் டிராக்...உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்
மெர்சல் படத்தின் சிங்கிள் டிராக் வெளியீட்டு தேதி இன்று மதியம் 12 மணிக்கு அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
விஜய்-அட்லி கூட்டணியில் மெர்சல் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படம் குறித்த தகவல்களும் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். மெர்சல் படத்தின் இசை வெளியீட்டு விழா ஆக்ஸ்ட் 20-ம் தேதி பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கு முன்பு ஒரு பாடலை வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. இந்நிலையில் சிங்கிள் டிராக் வெளியீட்டு தேதி இன்று மதியும் 12 மணிக்கு அறிவிக்கப்படும் என்று ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் ஹேமா ருக்மணி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதுவரை இரண்டு போஸ்டர்கள் வெளிவந்துள்ள நிலையில் மூன்றாவது போஸ்டரும் இந்த அறிவிப்புடன் வெளிவர இருப்பதாகவும், இசை வெளியீட்டிற்கு முன்பாக இரண்டாவது பாடலை வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்த செய்தியை விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் ஷேர் செய்து டிரண்டாக்கி வருகின்றனர்.