பெங்களூரில் மெர்சலுக்கு எதிர்ப்பு: விஜய் ரசிகர்கள் - கன்னட அமைப்பினர் மோதல்

பெங்களூரில் மெர்சலுக்கு எதிர்ப்பு: விஜய் ரசிகர்கள் - கன்னட அமைப்பினர் மோதல்

பெங்களூரில் மெர்சலுக்கு எதிர்ப்பு: விஜய் ரசிகர்கள் - கன்னட அமைப்பினர் மோதல்
Published on

பெங்களூரில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள மெர்சல் திரைப்படம் திரையிடுவதற்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால், அவர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதையடுத்து மெர்சல் திரைப்பட விளம்பரப் பதாகைகளை கன்னட அமைப்பினர் கிழித்தெறிந்தனர். இதனால் மல்லேஸ்வரம் பகுதியில் சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது. நேற்றைய காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. இதேபோல், மைசூரிலும் கன்னட அமைப்பினர் மெர்சல் திரைப்படத்தை திரையிடக்கூடாது எனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏற்கனவே சத்யராஜ் நடித்துள்ள காரணத்தால் பாகுபலி 2 படத்திற்கு கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com