\
‘மெர்சல்’க்கு சிறந்த படத்துக்கான பிரிட்டன் விருது!

‘மெர்சல்’க்கு சிறந்த படத்துக்கான பிரிட்டன் விருது!

‘மெர்சல்’க்கு சிறந்த படத்துக்கான பிரிட்டன் விருது!
Published on

விஜய் நடித்து வெளிவந்த ‘மெர்சல்’ திரைப்படம் பிரிட்டன் தேசிய திரப்பட விழாவில் சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இளம் இயக்குநர் அட்லியின் படைப்பான ‘மெர்சல்’ படத்தில் விஜய், எஸ்ஜே சூர்யா, வடிவேலு, நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஏஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார். இதில் விஜய் மூன்று வேடத்தில் நடத்திருந்தார். இந்தப் படத்தில் ஜிஎஸ்டி தொடர்பாக பேசப்பட்ட ஒரு வசனம், பாஜகவினரால் எதிர்க்கப்பட்டு சர்ச்சைக்குள்ளானது. பின்னர் அந்தச் சர்ச்சையே படத்திற்கு பெரும் விளம்பரமாகவும் மாறிவிட்டது.

இந்நிலையில் இன்று லண்டனில் நடைபெற்ற பிரிட்டனின் நான்காவது தேசிய திரைப்பட விழாவில், ‘மெர்சல்’திரைப்படத்துக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 2018ஆம் ஆண்டுக்கான சிறந்த அயல்நாட்டு படம் என்ற விருதை ‘மெர்சல்’ பெற்றுள்ளது. இந்த விருது படக்குழுவினரை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com