\
இந்தியாவில் நம்பர் ஒன்: மெர்சல் புது சாதனை

இந்தியாவில் நம்பர் ஒன்: மெர்சல் புது சாதனை

இந்தியாவில் நம்பர் ஒன்: மெர்சல் புது சாதனை
Published on

இந்தியாவில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட டீஸர் என்ற புது சாதனையை மெர்சல் பெற்றுள்ளது.

இயக்குநர் அட்லீ இயக்கத்தில் விஜய் 3 கதாபாத்திரத்தில் நடித்து சமீபத்தில் வெளியான படம் மெர்சல். படம் வெளியாவதற்கு முன்பு தலைப்பு பிரச்னை, விலங்குநல வாரியம் தொடர்பான பிரச்னை போன்ற பிரச்னைகள் இருந்தன. படம் வெளியான பின்பு படத்தில் இடம்பெற்றிருந்த ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா உள்ளிட்ட வசனங்களால் பெரும் சர்ச்சை எழுந்தது. இதனால் படத்திற்கு கூடுதல் பிரபலம்தான் கிடைத்தது. அத்தோடு படம் வசூல் ரீதியிலும் நல்ல சாதனை படைத்தது.

இந்நிலையில் இந்தியாவில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட டீஸர் என்ற புது சாதனையை மெர்சல் பட டீஸர் பெற்றுள்ளது. யூடியூப் தளத்தில் இதுவரை 3,46,08,716 (3 கோடியே 46 லட்சத்து 8 ஆயிரத்து 716) பேர் மெர்சல் டீஸரை பார்த்துள்ளனர். இதற்கு முன் இந்தியாவில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட டீஸர் என்ற சாதனையை ரஜினியின் கபாலி படம்தான் (3,45,82,666) பெற்றிருந்தது. இந்நிலையில் தற்போது கபாலியின் சாதனையை மெர்சல் முறியடித்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com