பாஜகவை சேர்ந்த நடன இயக்குநர் காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய் மெர்சல் படத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.
மெர்சல் படத்தின் அரசியல் வசனங்களை அகற்ற வேண்டும் என்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளதரராஜன் கூறியிருந்தார். இவரது கருத்திற்கு பதிலளிக்கும் வகையில் காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் "இது வெறும் படம் தான். நடிகர்கள் வசனம் எழுதுவது இல்லை. அனைவருக்கும் கருத்து உண்டு. நாம் நடிகரை குறை சொல்ல வேண்டாம். படம் தணிக்கைச் சான்றிதழ் வாங்கியுள்ளது.சினிமா விமர்சனங்களை ஏற்றுக் கொள்கிறது. பொழுதுபோக்கை பொழுதுபோக்காக மட்டுமே பார்ப்போம்.அதை நிஜ வாழ்க்கையோடு ஒப்பிட்டக் கொள்ள வேண்டாம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழிசை கருத்திற்கு மாறாக அமைந்துள்ளது காயத்ரி ரகுராமின் இந்தக் கருத்து என்பது குறிப்பிடத்தக்கது.

