மெர்சல் படத்தின் சிங்கிள் ட்ராக்கான ‘ஆளப்போறான் தமிழன்’ நாளை வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மெர்சல் படத்தின் முதல் இரண்டு போஸ்டர்கள் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது மூன்றாவது போஸ்டர் வெளிவந்துள்ளது. மக்கள் நடுவே கையை உயர்த்தியது போல் மூன்றாவது போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் மூன்றாவது போஸ்டருடன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள படத்தின் சிங்கிள் ட்ராக்கான ‘ஆளப்போறான் தமிழன்’ நாளை வெளியிடப்படும் என்று ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
தமிழர்களையும் தமிழ் மொழியை போற்றும் வகையில் பாடல் ஒன்று படத்தில் இடம்பெற்றிருக்கும் என்று தகவல்கள் முன்பே வெளிவந்தன. இந்நிலையில் ‘ஆளப்போறான் தமிழன்’என்று தமிழனை போற்றும் வகையிலான பாடல் வெளிவர இருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழா ஆகஸ்ட 20ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அதற்கு முன்பாக இரண்டாவது பாடலையும் வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் #AalaporanTamizhan என்ற ஹேஷ்டேக் தற்போது ட்விட்டரில் ட்ரண்டாகி வருகிறது. சமீபகாலமாக தன்னுடைய எல்லா படங்களிலும் பாடல்களை பாடிவரும் நடிகர் விஜய் இந்தப்படத்தில் பாடியுள்ளாரா என்று இன்னும் தெரியாத நிலையில் அதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.