‘மெர்சல்’ 100வது நாள் கொண்டாட்டம்

‘மெர்சல்’ 100வது நாள் கொண்டாட்டம்

‘மெர்சல்’ 100வது நாள் கொண்டாட்டம்
Published on

‘மெர்சல்’ 100வது நாள் கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள் மூழ்கியுள்ளனர்.

கடந்த ஆண்டு வெளியான விஜய்யின் ‘மெர்சல்’ திரைப்படம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. படத்தில் இடம் பெற்றிருந்த ஜிஎஸ்டி சம்பந்தமான வசனங்களை கண்டித்து பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். குறிப்பிட்ட வசனத்தை நீக்க வலியுறுத்தி குரல் எழுப்பி வந்தனர். இதனை கண்டித்தும் நடிகர் விஜய்க்கு ஆதரவாகவும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி உட்பட பல அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். 

மேலும் விஜய்யின் இயற்பெயரான ஜோசப் விஜய் ஒரு சர்ச்சையாக உருவெடுத்தது. பல கட்டங்களில் எதிர்ப்புக்கள் இருந்தாலும் திரைப்படம் மாபெரும் வெற்றியை அடைந்தது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் அதிக வசூலை ஈட்டிய திரைப்படம் என்ற சாதனையை பெற்றது. இந்நிலையில் ‘மெர்சல்’ வெளியாகி இன்றுடன் 100 நாள்கள் முடிவடைந்துள்ளது. இதனை அவரது ரசிகர்கள் மிக உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com