\
தமிழ் ராக்கர்ஸில் மெர்குரி... படக்குழு அதிர்ச்சி

தமிழ் ராக்கர்ஸில் மெர்குரி... படக்குழு அதிர்ச்சி

தமிழ் ராக்கர்ஸில் மெர்குரி... படக்குழு அதிர்ச்சி
Published on


கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ’மெர்குரி’ திரைப்படம் தமிழகத்தில் வெளியாவதற்கு முன்பே தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இறைவி படத்திற்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள படம் மெர்குரி. இதில் பிரவுதேவா, இந்துஜா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வசனம் இல்லாமல் சைலன்ட் த்ரில்லர் பாணியில் உருவாக்கப்பட்டுள்ள படம் இது. சுமார் 31ஆண்டுகளுக்கு தமிழில் ஒரு சைலன்ட் த்ரில்லர் படம் எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அறிவித்தபடி இத்திரைப்படம் பிற பகுதிகளில் வெளியான நிலையில், தயாரிப்பாளர் சங்கம் வேலை நிறுத்தத்தினால் தமிழகத்தில் மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வெளியிடப்படுவதற்கு முன்னரே தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் மெர்குரி திரைப்படம் பதிவேற்றப்பட்டிருப்பது, படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com