சாமி ஸ்கொயர் ‘அதிரூபனே’ பாடல் நாளை வெளியீடு

சாமி ஸ்கொயர் ‘அதிரூபனே’ பாடல் நாளை வெளியீடு
சாமி ஸ்கொயர் ‘அதிரூபனே’ பாடல் நாளை வெளியீடு

விக்ரம் - ஹரி கூட்டணியில் உருவாகி வரும் சாமி ஸ்கொயர் படத்தில் இருந்து ‘அதிரூபனே’ என்ற பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகிறது. 

விக்ரம் - ஹரி கூட்டணியில் கடந்த 2003ஆம் ஆண்டு வெளியான படம் சாமி. விறுவிறுப்பன திரைக்கதை, ஆக்‌ஷன் காட்சிகளுடன் வெளியாகி விக்ரமுக்கு மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகமான ‘சாமி ஸ்கொயர்’ தயாராகி வருகிறது. இதில் விக்ரமுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ், முக்கிய கதாப்பாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், வில்லனாக பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் முதல் பாகத்தின் பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது சாமி ஸ்கொயர் படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பாளராக பணியாற்றி உள்ளார். தேவிஸ்ரீ பிரசாத்-ஹரி கூட்டணியில் வெளியான ஆறு, சிங்கம் 1, சிங்கம் 2 பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்தப்படத்தின் பாடல்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. படத்தின் டிரெய்லர் சில தினங்களுக்கு முன் வெளியானதையடுத்து நாளை மாலை 5 மணிக்கு ‘அதிரூபனே’ என்ற பாடல் வெளியாகிறது. படத்தின் படப்பிடிப்பு 90% முடிவடைந்து திரைக்கு வர தயாராகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com