ரகசிய திருமணம் செய்தது ஏன்? நடிகை மேக்னா நாயுடு விளக்கம்

ரகசிய திருமணம் செய்தது ஏன்? நடிகை மேக்னா நாயுடு விளக்கம்
ரகசிய திருமணம் செய்தது ஏன்? நடிகை மேக்னா நாயுடு விளக்கம்

டென்னிஸ் வீரரை ரகசியமாகத் திருமணம் செய்து கொண்ட நடிகை மேக்னா நாயுடு, 2 வருடத்துக்கு பிறகு அதை வெளியிட்டுள்ளார்.

தமிழில் சிம்பு நடித்த சரவணா, சரத்குமார் நடித்த வைத்தீஸ்வரன், வாடா உட்பட சில படங்களில் நடித்தவர் இந்தி நடிகை மேக்னா நாயுடு. தனு ஷின், குட்டி, கார்த்தியின் சிறுத்தை உட்பட சில படங்களில் குத்துப் பாடலுக்கு ஆடியும் உள்ளார். கடந்த சில வருடங்களாக சினிமாவில் நடிக்காமல் இருந்த அவர், டென்னிஸ் வீரரை திருமணம் செய்து கொண்டார் என்பது தெரிய வந்துள்ளது. இந்த திருமணம் இரண்டு வருடத்துக்கு
முன்பு நடந்துள்ளது.

திருமணத்தை மேக்னா ஏன் மறைத்தார் என்பது பற்றி அவர் கூறும்போது, ‘’போர்ச்சுக்கீசிய டென்னிஸ் வீரர் லூயிஸ் மிகுவல் ரீஸ் (Luis Miguel Reis) என்பவரை காதலித்து வந்தேன். கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் தேதி மும்பையில் திருமணம் செய்துகொண்டோம். பிறகு குடும்ப வாழ்க்கையை கவனிக்கத் தொடங்கிவிட்டேன். எளிமையாக, கவனிக்கப்படாமல் என் திருமணம் நடக்க வேண்டும் என்று நினைத்தேன். பிரமாண்டமாக நடத்தப்படும் திருமண விழாவில் எனக்கு விருப்பம் இல்லை. அதன்படியே எளிமையாக என் திருமணம் நடந்தது. இது என்
குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் தெரியும்.

சமீபத்தில் அவரிடம், இதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் போகிறேன் என்றேன்.  உங்களை எது தடுக்கிறது என்று கேட்டார். இதையடுத்து இப்போது  தெரியப்படுத்துகிறேன். நான் எனது அம்மாவின் பிறந்த நாளன்று திருமணம் செய்துகொண்டேன். என் அம்மாவிடம், பிறந்த நாள் பரிசாக என்ன வேண்டும் என்று கேட்டார் லூயிஸ். ‘உங்கள் திருமணம் தான்’ என்று சொன்னார் அம்மா.

உடனடியாக, இந்து முறைப்படி மும்பையில் எங்கள் திருமணம் நடந்தது. கிறிஸ்தவ முறைப்படி அடுத்த ஆண்டில் திருமணம் நடக்கும். எங்கள் ஹனிமூன் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது’’ என்ற மேக்னாவிடம், லூயிஸின் அறிமுகம் கிடைத்தது எப்படி என்று விசாரித்தால், சிரிக்கிறார்.

‘’என் அப்பா டென்னிஸ் பயிற்சியாளர். அவர் மூலமாக லூயிஸ் அறிமுகமானார். அவர் என்னை விட பத்து வயது அதிகமானவர். சமூக வலைத் தளம் மூலமாக எங்கள் நட்புத் தொடர்ந்தது. பின் அது காதலாக மாறியது’’ என்றார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com