நடிகை மேகா ஆகாஷின் ’இன்ஸ்டா’ பக்கம் முடக்கம்!

நடிகை மேகா ஆகாஷின் ’இன்ஸ்டா’ பக்கம் முடக்கம்!

நடிகை மேகா ஆகாஷின் ’இன்ஸ்டா’ பக்கம் முடக்கம்!
Published on

நடிகைகள் அக்‌ஷரா ஹாசன், ஹன்சிகா ஆகியோரின் சமூக வலைத்தளப் பக்கங்கள் சமீபத்தில் ஹேக் செய்யப்பட்டு அவர்களது அந்தரங்க புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை கிளப்பின. இந்நிலையில், நடிகை மேகா ஆகாஷின் இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. 

தமிழில், ’பேட்ட’, ’வந்தா ராஜாவாதான் வருவேன்’ படங்களில் நடித்திருப்பவர் மேகா ஆகாஷ். இவர் நடித்துள்ள பூமராங், எனை நோக்கி பாயும் தோட்டா, ஒரு பக்க கதை ஆகிய படங்கள் விரைவில் வெளியாக இருக்கின்றன. தெலுங்கில் நடித்துள்ள இவர், சமூக வலைத்தளப் பக்கங்களில் ஆக்டிவாக இருப்பவர். 

இவரது இன்ஸ்டாகிராம் பக்கம் சிலரால் ஹேக் செய்யப்பட்டுள்ளது. அதில் இருந்த மேகாவின் புகைப்படங்கள் மற்றும் வீடி யோக்கள் நீக்கப்பட்டுள்ளன. அதற்குப் பதிலாக ரஷ்யாவைச் சேர்ந்த டிஜேவான டம்லா (Damla Ekmekçioglu)வின் புகைப் படங்களை பதிவேற்றியுள்ளனர். அவரது புரொபைலும் மாற்றப்பட்டுள்ளது. 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com