“மேகதூதம் பாடவேண்டும்” - தாமரையின் நெஞ்சை உருக்கும் ‘ஐரா’ பாடல்

“மேகதூதம் பாடவேண்டும்” - தாமரையின் நெஞ்சை உருக்கும் ‘ஐரா’ பாடல்

“மேகதூதம் பாடவேண்டும்” - தாமரையின் நெஞ்சை உருக்கும் ‘ஐரா’ பாடல்
Published on

நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ‘ஐரா’ படத்தின் மேகதூதம் பாட வேண்டும் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

நயன்தாராவின் நடிப்பில் விரைவில் திரைக்கு வர உள்ள திரைப்படம் ‘ஐரா’. இந்தப் படத்தில் நயன் இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். இந்தப் படம் பெண் பிள்ளைகளின் சிசுக் கொலையை முன்வைத்து எடுக்கப்பட்டுள்ள பேய் படம் எனத் தெரிய வந்துள்ளது. இதனை கேஜேஆர் ஸ்டுடியோ தயாரிப்பில் கோத்தபாடி ராஜேஸ் மற்றும் டிரெண்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர். இந்தப் படத்தில் நயன்தாராவுடன் கலையரசன், யோகிபாபு, ஜெயபிரகாஷ், லீலாவதி உள்பட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். 

         
 
‘லட்சுமி’,‘மா’ ஆகிய இரண்டு குறும்படங்களை இயக்கிவிட்டு அதன் பின் ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’ படத்தை இயக்கிய சர்ஜூன் இந்த ‘ஐரா’வையும் இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் டீசர் கடந்தமாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

“எல்லோருக்கும் சந்தோஷமாக வாழணும்னுதான் ஆசை. ஆனா, வாழ்க்கையில் எதுவுமே சந்தோஷமாக கிடைக்காத ஒருத்திக்கு வாழ்க்கையே ஆசைதான்” என்ற வசனத்துடன் முடிவடையும் இந்த டீசரை இதுவரை 24.5 லட்சம் பேர் யுடியூபில் பார்வையிட்டுள்ளனர்.

இந்நிலையில், ‘ஐரா’ படத்தில் உள்ள “மேகதூதம் பாடவேண்டும்” என்ற பாடல் வரிகள் கொண்ட வீடியோ இன்று மாலை 5 மணிக்கு வெளியாகியுள்ளது. கவிஞர் தாமரை எழுதியுள்ள இந்தப் பாடலை பத்மப்ரியா ராகவன் பாடியுள்ளார்.

சுந்தரமூர்த்தி இசையில் இந்தப் பாடல் கேட்பதற்கு இனிமையாகவும், தாமரை வரிகளில் உருக்கமாகவும் இருக்கிறது என்று ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளாங்களில் நெகிழ்ச்சியாக தெரிவித்து வருகின்றனர்.  ‘மேகதூதம்..மேகதூதம் பாட வேண்டும்’ என்று பாடல் வரிகள் தொடங்குகின்றது. 

பாடலில் வரும் “கானல் ஆகுமோ காரிகை கனவு தாகம்.. தீர்க்குமோ கோடையின் நிலவு” , “தேவமுல்லை பூக்கும் கொல்லை.. கொண்டதே என் வீட்டின் எல்லை”, “என்னை நீ மறவாதிரு புயல் காற்றிலும் பிரியாதிரு..”, “தும்பை போலே தூய அழகை, உன்னிடம் தான் காண்கிறேன்”, “என்கை நீட்டி ஏந்தி அணைக்கும், நாளை எண்ணி ஏங்கினேன்” என்ற பாடலில் வரும் வார்த்தைகளை தனித்தனியே எடுத்து ரசிகர்கள் ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார்கள்.

லிரிக்கல் வீடியோவில் படத்தில் நயன்தாரா உள்ள பாத்திரம் தொடர்பான படங்கள் இடம்பெற்றுள்ளன. கலையரசன் - நயன்தாரா இருவரும் ஜோடியாக உள்ள படங்களும் உள்ளன. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com