சினிமா
மன்மோகன் சிங் படத்தில் சோனியாவாக நடிக்கும் ஜெர்மன் நடிகை!
மன்மோகன் சிங் படத்தில் சோனியாவாக நடிக்கும் ஜெர்மன் நடிகை!
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் வாழ்க்கை வரலாறு, ’தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர்’ (The Accidental Prime Minister) என்ற பெயரில் சினிமாவாக உருவாகிறது.
இதில் மன்மோகன் சிங்காக அனுபம் கெர் நடிக்கிறார். விஜய் ரத்னாகர் இயக்கும் இந்தப் படத்தை போரா பிரதர்ஸ் தயாரிக் கின்றனர். மன்மோகன் சிங் பற்றி சஞ்சய் பாரு (SanjayBaru) எழுதிய ‘தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர்’ என்ற புத்தகத் தின் அடிப்படையில் இந்தப் படம் எடுக்கப்படுகிறது.
இதன் பர்ஸ்ட் லுக்கை அனுபம் கெர் நேற்று வெளியிட்டார். இந்தப் படத்தில் சோனியா காந்தியின் கேரக்டரில், ஜெர்மன் நடிகை சுஸானே பெர்னர்ட் நடிக்கிறார். இவர் சில இந்திப் படங்களில் நடித்துள்ளார். மற்றும் பிரியங்கா காந்தியாக அஹனா கும்ரா, சஞ்சய் பாருவாக அக்ஷய் கண்ணா நடிக்கின்றனர். இந்த வருடம் டிசம்பர் மாதம் 21-ம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது.