பிறந்த குழந்தைகளுக்கு பரிசு பெட்டகம் - ரஜினி ரசிகர்களின் தர்பார் கொண்டாட்டம்

பிறந்த குழந்தைகளுக்கு பரிசு பெட்டகம் - ரஜினி ரசிகர்களின் தர்பார் கொண்டாட்டம்

பிறந்த குழந்தைகளுக்கு பரிசு பெட்டகம் - ரஜினி ரசிகர்களின் தர்பார் கொண்டாட்டம்
Published on

தர்பார் திரைப்படம் வெளியானதை முன்னிட்டு பேனர்கள் வைக்காமல், பிறந்த குழந்தைகளுக்கு பரிசு பெட்டகங்களை வழங்கி ரஜினி ரசிகர்கள் கொண்டாடினர்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படம் இன்று நாடு முழுவதும் வெளியானது. அந்த வகையில், நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் இரண்டு திரையரங்குகளில் தர்பார் திரைப்படம் வெளியிடப்பட்டது. தர்பார் படம் வெளிவந்ததை முன்னிட்டு வழக்கம் போல் திரையரங்கு முன்பு பேனர்கள் வைக்காமல் ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு பரிசு பெட்டகங்கள் வழங்கப்பட்டது.

பரிசுப் பெட்டகத்தில் குழந்தைகளுக்கு தேவையான மெத்தை, பவுடர், சோப்பு உள்ளிட்ட பொருட்கள் இருந்தன. அதை குழந்தைகளின் தாய்மார்களிடம் நாகை மாவட்ட செயலாளர் ராஜேஸ்வரன் வழங்கினார். இதில் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ராஜசேகர் மற்றும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com