சினிமா
மயிலாடுதுறை: 42 யூனிட் ரத்தம் வழங்கி விஜய் சேதுபதியின் பிறந்தநாளை கொண்டாடிய ரசிகர்கள்
மயிலாடுதுறை: 42 யூனிட் ரத்தம் வழங்கி விஜய் சேதுபதியின் பிறந்தநாளை கொண்டாடிய ரசிகர்கள்
மயிலாடுதுறையில் நடிகர் விஜய் சேதுபதியின் 42-வது பிறந்த நாள் விழாவை, அவரது ரசிகர்கள் அரசு மருத்துவமனையில் 42 யூனிட் ரத்தம் வழங்கி கொண்டாடினர்.
நடிகர் விஜய் சேதுபதி தனது 42-வது பிறந்த நாளை பட்டாக்கத்தி கொண்டு கேக் வெட்டி கொண்டாடியது சில நாட்களுக்கு முன்பு சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் விஜய் சேதுபதியின் 42-வது பிறந்த நாள் விழாவை மயிலாடுதுறையில் அவரது ரசிகர்கள் ரத்ததானம் வழங்கி கொண்டாடினர்.
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி ரசிகர் மன்ற நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாவட்ட தலைவர் ஜெயபால் சேது தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவரது ரசிகர்கள் 42 யூனிட் ரத்தம் தானமாக வழங்கினர். ரத்த தானம் வழங்கியவர்களுக்கு மருத்துவமனை ரத்த பிரிவு மருத்துவர் பரணிதரன் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.