வருமான வரித்துறையினரின் சோதனை காரணமாக ஃபீனிக்ஸ் மாலில் உள்ள ஜாஸ் சினிமாசில் இன்றை மதிய காட்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சசிகலாவின் உறவினர் வீடுகள் உள்பட 150-க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஜெயா டிவியின் தலைமை செயல் அதிகாரி விவேக் ஜெயராமன் வீடு, வேளச்சேரி ஃபீனிக்ஸ் மாலில் உள்ள ஜாஸ் சினிமாஸ் அலுவலகம் ஆகிய இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வருமான வரித்துறையினரின் சோதனை காரணமாக சென்னை வேளச்சேரி ஃபீனிக்ஸ் மாலில் உள்ள ஜாஸ் சினிமாஸில் இன்றை மதிய காட்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மதிய காட்சிக்காக முன்பதிவு செய்திருந்தவர்களுக்கு கட்டணம் திருப்பி செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.