’கில்லி’ விஜய்க்கே கபடி சவால் விடும் அர்ஜுன் தாஸ்! - ’மாஸ்டர்’ ப்ரோமோ வெளியீடு

’கில்லி’ விஜய்க்கே கபடி சவால் விடும் அர்ஜுன் தாஸ்! - ’மாஸ்டர்’ ப்ரோமோ வெளியீடு
’கில்லி’ விஜய்க்கே கபடி சவால் விடும் அர்ஜுன் தாஸ்! - ’மாஸ்டர்’ ப்ரோமோ வெளியீடு

பொங்கலையொட்டி மாஸ்டர் படம் வெளியாகவுள்ள நிலையில்,  ’கில்லி’ பட கபடி பாடல் பேக்ரவுண்டில் விஜய் – அர்ஜுன் தாஸ் கபடி விளையாடும் புதிய ப்ரோமோவை மாஸ்டர் படக்குழு வெளியிட்டுள்ளதால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

விஜய்யின் 64-வது படமான 'மாஸ்டர்' படத்தை 'மாநகரம்', 'கைதி' வெற்றிப் புகழ் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருப்பதால், வெறித்தனமாக காத்திருகிறார்கள் ரசிகர்கள். அனிருத் இசையில் வெளியாகவுள்ள இந்தப் படத்தில், விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடிக்கிறார்கள். பவானி என்ற கேரக்டரில் மிரட்டல் வில்லனாக நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி.

 இந்நிலையில், இன்று வெளியிட்டுள்ள ப்ரோமோவில், ”என்ன வாத்தி இந்த இந்த விளையாட்டோட பேராவது தெரியுமா? இது கிரிக்கெட்டோ ஃபுட்பாலோ இல்ல. இங்க ரூல்ஸே வேற” என்று அர்ஜுன் தாஸ் கணீர் குரலில் மிரட்ட விஜய்யில் 'கில்லி'  பட கபடி..கபடி பேக்ரவுண்ட் பாடல் ஒலிக்கிறது. விஜய் கபடி ஆடிக்கொண்டே ஃபைட் செய்கிறார். இந்த வீடியோவை விஜய் ரசிகர்கள் பகிர்ந்து ’செம்ம மாஸ்’ என்று தெறிக்கவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com