\
வில்லுடன் விஜய்; ட்விட்டரை தெறிக்கவிடும் மாஸ்டர் போஸ்டர்!

வில்லுடன் விஜய்; ட்விட்டரை தெறிக்கவிடும் மாஸ்டர் போஸ்டர்!

வில்லுடன் விஜய்; ட்விட்டரை தெறிக்கவிடும் மாஸ்டர் போஸ்டர்!
Published on

மாஸ்டர் படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு இருக்கிறது படக்குழு. மஞ்சள் நிற ஃபோல்டிங் செய்யப்பட்ட உடையில் விஜய் வில்லுடன் இருக்கும் புகைப்படத்தை வைரல் செய்து வருகின்றனர் அவரது ரசிகர்கள்.

விஜய்யின் 64-வது படமான 'மாஸ்டர்' படத்தை 'மாநகரம்', 'கைதி' வெற்றிப் புகழ் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருப்பதால், வெறித்தனமாக காத்திருகிறார்கள் ரசிகர்கள். அனிருத் இசையில் வெளியாகவுள்ள இந்தப் படத்தில், விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடிக்கிறார்கள். பவானி என்ற கேரக்டரில் மிரட்டல் வில்லனாக நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி.

படம் பொங்கலையொட்டி நாளை வெளியாகவுள்ளதால், புதிய புகைப்படங்களையும், ப்ரோமோக்களையும், போஸ்டர்களையும் வெளியிட்டு வருகிறது படக்குழு. தற்போது, வெளியிட்டுள்ள புகைப்படத்தில் விஜய் மஞ்சள் நிற ஃபோல்டிங் செய்யப்பட்ட சட்டையில் இளமையாக வில்லுடன் வியக்கவைக்கிறார். இந்த புகைப்படங்கள் ட்விட்டர் முழுக்க வைரலாகி வருகின்றன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com