விஜய், விஜய் சேதுபதியின் மிரட்டலான ’புத்தாண்டு ஸ்பெஷல்’ மாஸ்டர் போஸ்டர் வெளியீடு!

விஜய், விஜய் சேதுபதியின் மிரட்டலான ’புத்தாண்டு ஸ்பெஷல்’ மாஸ்டர் போஸ்டர் வெளியீடு!
விஜய், விஜய் சேதுபதியின் மிரட்டலான ’புத்தாண்டு ஸ்பெஷல்’ மாஸ்டர் போஸ்டர் வெளியீடு!

புத்தாண்டையொட்டி ’மாஸ்டர்’ பட புதிய ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டிருக்கிறது தயாரிப்பு நிறுவனம்.

விஜய்யின் 64-வது படமான 'மாஸ்டர்' படத்தை 'மாநகரம்', 'கைதி' வெற்றிப் படங்களின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருப்பதால், வெறித்தனமாக காத்திருகிறார்கள் விஜய் ரசிகர்கள்.

அனிருத் இசையில் வெளியாகவுள்ள இந்தப் படத்தில், விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடிக்கிறார்கள். பவானி என்ற கேரக்டரில் மிரட்டல் வில்லனாக நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. மாஸ்டர் பொங்கலுக்கு வெளியாவதால் 100 சதவீத பார்வையாளர்களை தியேட்டர்களில் அனுமதிக்கக்கோரி முதல்வரிடம் கோரிக்கை வைத்திருக்கிறார் நடிகர் விஜய். 

இந்நிலையில், மாஸ்டர் தயாரிப்பு நிறுவனம் நேற்று முன் தினம் விஜய் போஸ்டர்களை வெளியிட்ட நிலையில், நேற்று ’மாஸ்டர்’ படத்தின் விஜய், விஜய், விஜய் சேதுபதி படங்களை வெளியிட்டனர். இன்று புத்தாண்டையொட்டி ட்ரைலரை வெளியிடச்சொன்ன ரசிகர்களுக்கு மாஸ்டர் ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது படக்குழு. இதனை விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆக்கி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com