\
வசந்த பாலன் இயக்கத்தில் நடிகர் அர்ஜூன் தாஸ் - இயக்குநர் வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு

வசந்த பாலன் இயக்கத்தில் நடிகர் அர்ஜூன் தாஸ் - இயக்குநர் வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு

வசந்த பாலன் இயக்கத்தில் நடிகர் அர்ஜூன் தாஸ் - இயக்குநர் வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு
Published on

‘கைதி’ ’ ‘மாஸ்டர்’ படங்களில் நடித்த அர்ஜூன் தாஸ் இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

‘வெயில்’, ‘அங்காடி தெரு’, காவியத் தலைவன், ‘ஜெயில்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் வசந்தபாலன் தனது பள்ளி நண்பர்களுடன் இணைந்து தயாரிப்பாளராக களம் இறங்குகிறார்.

பெயரிடப்படாத இந்தப் படத்தில்  ‘கைதி’  ‘மாஸ்டர்’,  ‘அந்தகாரம்’ உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் ஈர்த்த அர்ஜூன் தாஸ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இவர்கள் தொடங்கி இருக்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கு யூ பாய்ஸ் ஸ்டூடியோஸ் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்தப்படத்தை இயக்குநர் வசந்த பாலனே இயக்குகிறார். இது குறித்தான அதிகாரபூர்வ அப்டேட்டை இயக்குநர் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com