பிரமாண்ட அரங்கில் நடக்கும் பாகுபலி-2 இசை வெளியீட்டு விழா
பாகுபலியின் இரண்டாம் பாகமான பாகுபலி தி கன்க்ளூசன் படத்தின் பாடல் வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடத்தப்பட இருக்கிறது.
ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில், வரும் 26ஆம் தேதி படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை மிகப் பிரம்மாண்டமாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விழாவிற்கு ஆயிரக்கணக்கானோர் வருவார்கள் என்பதால், பிரமாண்டமான செட் அமைக்கப்படுகிறது. பாலிவுட் நடிகர்களும் பாடல் வெளியீட்டு விழாவிற்கு வருகை தர இருப்பதாக கூறப்படுகிறது. அண்மையில் வெளியான பாகுபலி படத்தின் டிரெய்லர் பலத்த வரவேற்பு பெற்றது. பாகுபலி ஆடியோ உரிமையை லஹரி என்ற நிறுவனம் ரூ.4.5 கோடிக்கு வாங்கி உள்ளது. தமிழ் பதிப்புக்கான வெளியீட்டு விழா தனியாக நடைபெறும் என்று தெரிகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழியில் தயாராகியிருக்கும் பாகுபலி - 2 திரைப்படம் ஏப்ரல் 28ம் தேதி திரைக்கு வருகிறது.