\
‘சூர்யா36’ தெலுங்கு வில்லன்

‘சூர்யா36’ தெலுங்கு வில்லன்

‘சூர்யா36’ தெலுங்கு வில்லன்
Published on

‘சூர்யா36’ இல் தெலுங்கு பட நாயகன் வில்லனாக இணைய இருப்பதாக செய்தி வெளிவந்துள்ளது.

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ளார். இதற்கான பூஜை சமீபத்தில் நடைபெற்றது. ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர் படத்தினை தயாரிக்க உள்ளது. இந்தப் படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. ஆகவே ட்விட்டர் போன்ற சமூக வலைதளத்தில் ‘சூர்யா36’ என குறிப்பிடப்பட்டு வருகிறது. இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் ஆந்திர ஹீரோ ஜெகபதி பாபு நடிக்க உள்ளார். இவர் ஏற்கெனவே விஜய்யின் ‘பைரவா’, விஷாலின் ‘கத்திசண்டை’, விக்ரமின் ’தாண்டவம்’ போன்ற படங்களில் நடித்துள்ளார். 

சூர்யாவின் படங்களுக்கு தெலுங்கு ரசிகர்களிடம் அதிக வரவேற்பு உள்ளதால் ஜெகபதிபாபு காம்பினேஷன் கமர்ஷியலான வெற்றிக்கு உதவியாக இருக்கும் என படக்குழு முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. ஆனால் இந்தச் செய்தி இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com