நகைச்சுவை நடிகை வித்யூலேகாவுக்கு டும் டும்.... சமூக விலகலுடன் நடந்த நிச்சயதார்த்தம்
தமிழ் சினிமாவில் விரல் விட்டு எண்ணக்கூடிய இளம் நகைச்சுவை நடிகைகளில் ஒருவர் வித்யூலேகா. குணச்சித்திர நடிகர் மோகன் ராமனின் அருந்தவப் புதல்வி. கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான நீதானே என் பொன் வசந்தம் படத்தில் அறிமுகமான லேகா, ஜில்லா, வீரம், மாஸ், புலி உள்ளிட்ட பல படங்களில் நடிப்புக்காகப் பேசப்பட்டார்.
தற்போது அவருக்குத் திருமணம் நிச்சயமாகியுள்ளது. நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டும் அழைக்கப்பட்டு, சமூக விலகலுடன் மிக எளிமையாக நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.
இதுபற்றி பதிவிட்டுள்ள வித்யூலேகா, மாப்பிள்ளை யாரென்ற விவரத்தை வெளியிடவில்லை. "இது எங்கள் வெளிச்சம். நாங்கள் பெற்ற அன்பிற்கு மிகவும் நன்றியுள்ளவர்களாக இருப்போம். நாங்கள் முகமூடிகளை அணிந்திருந்தோம். புகைப்படங்களுக்காக அவற்றை அகற்றினோம். வாழ்த்துகளைப் பொழிந்த அனைவருக்கும் நன்றி" என்றும் வித்யூலேகா மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.