முத்தழகிக்கு பதிவுத் திருமணம்!

முத்தழகிக்கு பதிவுத் திருமணம்!

முத்தழகிக்கு பதிவுத் திருமணம்!
Published on

பருத்திவீரன் படத்தில் முத்தழகியாக நடித்து தேசிய விருது பெற்றவர் நடிகை ப்ரியாமணி. தமிழில் பல்வேறு படங்களில் நடித்துள்ள அவர் மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட படங்களிலும் பிஸியாக வலம் வந்தார். 
இந்நிலையில் பட வாய்ப்புகள் குறைந்ததால் தற்போது தனியார் தொலைக்காட்சி ஒன்றின் ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார். தொழிலதிபர் முஸ்தபா ராஜ் என்பவரை காதலித்து வந்த பிரியாமணிக்கு கடந்த ஐந்து மாதங்களுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில் வரும் ஆகஸ்டு 23ம் தேதி இருவரும் எளிமையாக பதிவு திருமணம் செய்து கொள்ள உள்ளனர்.  உணவு உபசரிப்பு பெங்களூருவில் உள்ள ஸ்வாங் விடுதியில் நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுத்திருக்கிறார் முத்தழகி. 
 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com