மர்லின் மன்றோவின் திருமண கார் ஏலம்!

மர்லின் மன்றோவின் திருமண கார் ஏலம்!
மர்லின் மன்றோவின் திருமண கார் ஏலம்!

ஹாலிவுட் நடிகை மர்லின் மன்றோ பயன்படுத்திய கார் ஏலத்துக்கு வருகிறது

பிரபல ஹாலிவுட் நடிகை மர்லின் மன்றோ. 1947-ஆம் ஆண்டு திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய இவர், தொடர்ந்து பல படங்களில் தனது அபார நடிப்புத் திறமையாலும், அழகாலும் ரசிகர்களை கவர்ந்தார். நடிகையாக மட்டுமின்றி பாடகி, இயக்குனர் என பல்வேறு முகங்களும் இவருக்கு உண்டு. 

தன் கடைசி நாட்களில் போதைக்கு அடிமையான இவர், 1962-ம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். போதைப் பொருள் அதிகம் உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டார் என்று அறிவிக்கப்பட்டாலும், கொலை செய்யப்பட்டிருக்க லாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. 

இந்நிலையில், அவர் பயன்படுத்திய கருப்பு நிற ’போர்ட் தண்டர்பேர்ட்’ என்ற கார் ஏலத்துக்கு வர இருக்கிறது. இந்த காரை தனது திருமணத்துக்கு முன்பு வாங்கினார் மன்றோ. கணவர், ஆர்தர் மில்லர் உடனான தனது திருமண வரவேற்புக்கு இந்த காரில்தான் வந்தார். அந்த காலகட்டத்தில் புகழ்பெற்றிருந்த இந்த காரை பின்னர், இயக்குனரும் நடிப்பு பயிற்சியாளருமான லீ ஸ்டாரான்பெர்க்கின் மகன் ஜானுக்கு பரிசாக வழங்கினார் மன்றோ. இந்த கார் இப்போது ஏலத்துக்கு வருகிறது. கார் பழசென்றாலும் கண்டிசன் அருமை என்கிறார்கள்.

ஜூலியன் என்ற ஏல நிறுவனம் இதை நவம்பர் மாதம் ஏலத்தில் விட இருக்கிறது. ஐந்து லட்சம் அமெரிக்க டாலருக்கு மேல் இந்த கார் ஏலம் போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com