‘மரகத நாணயம்’ ஏ.ஆர்.கே சரவணனுடன் இணையும் ஹிப் ஹாப் ஆதி: அதிகாரபூர்வ அறிவிப்பு

‘மரகத நாணயம்’ ஏ.ஆர்.கே சரவணனுடன் இணையும் ஹிப் ஹாப் ஆதி: அதிகாரபூர்வ அறிவிப்பு
‘மரகத நாணயம்’ ஏ.ஆர்.கே சரவணனுடன் இணையும் ஹிப் ஹாப் ஆதி: அதிகாரபூர்வ அறிவிப்பு

‘மரகத நாணயம்’ பட இயக்குநர் சரவணன் இயக்கத்தில் நடிகர் ஹிப் ஹாப் ஆதி நடிக்கும் புதிய படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

சமீபத்தில் வெளியான ‘சிவக்குமாரின் சபதம்’ படத்திற்குப்பிறகு ஆதி ‘அன்பறிவு’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்து வரும் நிலையில், இதே நிறுவனத்துடன் ஆதி தற்போது மீண்டும் இணைந்திருக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை ‘மரகத நாணயம்’ பட இயக்குநர் ஏ.ஆர்.கே சரவணன் இயக்குகிறார். ’மரகத நாணயம்’ கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியாகி கவனம் ஈர்த்த படம் என்பதால் இப்படத்திற்கும் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

பெரிய பட்ஜெட்டில் பொழுதுபோக்கு, ஃபேண்டஸி திரைப்படமாக உருவாகும் இப்படத்தினை செந்தில் தியாகராஜன், அர்ஜூன் தியாகராஜன் இணைந்து தயாரிக்க, சத்யஜோதி ஃபிலிம்ஸ் சார்பில் தியாகராஜன் வழங்குகிறார். இந்த புதிய திரைப்படம் ஆயுத பூஜை அன்று துவங்குகிறது. படப்பிடிப்பு வரும் டிசம்பர் மாதம் துவங்குகிறது. பொள்ளாச்சி மற்றும் சென்னை பகுதிகளில், 75 நாட்களில் ஒரே கட்டமாக படமாக்க திட்டமிட்டுள்ளார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com