பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மலையாள நடிகை பாவனாவிற்கு நீதி கிடைக்க வேண்டும் என தமிழ், மலையாளம், தெலுங்கு திரைப்பிரபலங்கள் குரல் கொடுத்து வருகின்றனர். #safetyforwomen என்ற ஹேஷ்டேக்குடன் டுவிட்டரில் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
நடிகை ஜெனிலியா நாங்கள் அனைவரும் உங்களுக்கு துணையாக இருப்போம் என குறிப்பிட்டுள்ளார்.
ஜெனிலியாவின் கணவர் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக், ஒட்டுமொத்த நாடும் பாவனாவுக்கு துணையாக இருக்கும் என தனது கருத்தினை பதிவு செய்துள்ளார்.
நடிகர் ப்ருத்விராஜ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், அதிர்ச்சிகரமான செய்தியை அறிந்து சமூகத்தில் ஒருவனாக தான் வெட்கித் தலைகுனிவதாகக் கூறியுள்ளார்.
நடிகர் மோகன்லால் இதற்காக மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் செல்வதைவிட, பாதிக்கப்பட்டவருக்கு தாமதமின்றி நீதி கிடைக்க செய்ய வேண்டும் என தனது கருத்தை டுவிட்டரில் தெரிவித்துள்ளார்
நடிகை அமலாபால், பாவனாவை துன்புறுத்தியவர்களை வன்மையாகக் கண்டிப்பதாக தெரிவித்துள்ளார்.
மலையாள பிரபலங்களான சோபி சௌத்ரி, நிவின் பாலி, ஷ்ரதா, பர்ஹான் அக்தர் ஆகியோரும் பவானாவுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து உள்ளனர்.