மனோரமாவின் மகன் மருத்துவமனையில் அனுமதி... தூக்கமாத்திரை சாப்பிட்டாரா?

மனோரமாவின் மகன் மருத்துவமனையில் அனுமதி... தூக்கமாத்திரை சாப்பிட்டாரா?

மனோரமாவின் மகன் மருத்துவமனையில் அனுமதி... தூக்கமாத்திரை சாப்பிட்டாரா?
Published on

பழம்பெரும் நடிகையான மனோ ரமாவின் மகன் பூபதி உடல்நலம் பாதிக்கப்பட்டு ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மறைந்த நடிகை மனோரமாவின் மகன் பூபதி. இவர் சென்னை தி.நகர் நீலகண்டமேத்தா தெருவில் வசித்து வருகிறார். மதுப் பழக்கம் உடையவர் எனக் கூறப்படுகிறது. இதனிடையே ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில் நேற்று இரவு பூபதிக்கு திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டது. உறவினர்கள் சிகிச்சைக்காக ஆயிரம் விளக்கு அப்போலோ மருத்துவமனையில் அனுமதித்தனர். தகவல் அறிந்து மாம்பலம் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், பூபதி மது கிடைக்காததால் கடந்த 6-ம்தேதி இரவு தூக்க மாத்திரை சாப்பிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து பூபதிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com