வாழ்க்கை அனுபவங்களை புத்தகமாக்கிய மனோஜ் கே.ஜெயன்!

வாழ்க்கை அனுபவங்களை புத்தகமாக்கிய மனோஜ் கே.ஜெயன்!
வாழ்க்கை அனுபவங்களை புத்தகமாக்கிய மனோஜ் கே.ஜெயன்!

நடிகர் மனோஜ் கே.ஜெயன் தனது வாழ்க்கை அனுபவங்களை புத்தகமாக எழுதியுள்ளார்.

தமிழில், திருமலை, திருப்பாச்சி, திருட்டுப்பயலே, திமிரு, வில்லு உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் மலையாள நடிகர் மனோஜ் கே.ஜெயன். இவர் நடிகை ஊர்வசியை காதலித்து 1999 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு தேஜலட்சுமி என்ற மகள் உள்ளார். இந்நிலையில் 2008 ஆம் ஆண்டு அவரை விவாகரத்து செய்த மனோஜ் கே.ஜெயன், ஆஷா என்பவரை 2-வதாக திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அம்ரித் என்ற மகன் உள்ளார்.

52 வயதான மனோஜ் கே ஜெயன், தனது வாழ்க்கை கதையை, ’மாதா பிதா குரு தெய்வம்’ என்ற தலைப்பில் புத்தகமாக எழுதியுள்ளார். மலையாளத்தில் எழுதப்பட்டுள்ள இந்தப் புத்தகத்துக்கு நடிகர் மம்மூட்டி முன்னுரை எழுதியுள்ளார். 

இந்த புத்தகத்தில் கர்நாடக இசைக் குடும்பத்தில் பிறந்து சினிமாவுக்கு வந்தது, ஆரம்ப கால போராட்ட வாழ்க்கை, காதல் வயப்பட்டது, நடிகை ஊர்வசியை திருமணம் செய்தது, தமிழ், தெலுங்கு சினிமா அனுபவங்கள், கசப்பான வாழ்க்கை உள்ளிட்ட பல விஷயங்களை குறிப்பிட்டுள் ளதாகக் கூறப்படுகிறது. தனது அனுப வங்களை அவர் எழுதியிருந்தாலும் இந்த புத்தகம் அவரது சுயசரிதை போல்தான் உள்ளது என்று முன்னுரையில் மம்மூட்டி குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com