\
விமலின் ‘மன்னர் வகையறா’ பொங்கல் ரிலீஸ்

விமலின் ‘மன்னர் வகையறா’ பொங்கல் ரிலீஸ்

விமலின் ‘மன்னர் வகையறா’ பொங்கல் ரிலீஸ்
Published on

விமல் நடிப்பில் வெளிவர உள்ளத் திரைப்படம் ‘மன்னர் வகையறா’. இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்து தற்சமயம் போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில் இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை சினிமா சிட்டி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ‘சதுரங்க வேட்டை-2’ படத்தையும் இந்நிறுவனம் தான் தமிழகம் முழுக்க வெளியிட இருக்கிறது.

இந்தப்படத்தை விமலின் சொந்த நிறுவனமான ஏ3வி சினிமாஸ் தயாரித்துள்ளது. காமெடியுடன் கூடிய கமர்ஷியல் படங்களை தருவதில் கைதேர்ந்த இயக்குனர் பூபதி பாண்டியன் இதனை இயக்கியுள்ளார். விமல் ஜோடியாக கயல் ஆனந்தி நடிக்க, வேறு சில முக்கிய வேடங்களில் பிரபு, சரண்யா, ரோபோ சங்கர், யோகிபாபு, ஜெயபிரகாஷ், யாரடி நீ மோகினி கார்த்திக், சாந்தினி என பலர் இதில் நடித்துள்ளனர். பி.ஜி.முத்தையா மற்றும் சூரஜ் நல்லுசாமி ஆகியோர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். ஜாக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார். வரும் 2018 ஜனவரி பொங்கல் திருநாளன்று படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com