மீண்டும் தியேட்டர்களில் வெளியாகும் சிம்புவின் ’மன்மதன்’!
சிம்பு- ஜோதிகா நடித்த ’மன்மதன்’ படம் மீண்டும் தியேட்டர்களில் வெளியாகவிருக்கிறது. இதனால்,சிம்பு ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.
கடந்த 2004 ஆம் ஆண்டு சிம்பு இரட்டை வேடத்தில் நடித்த ‘மன்மதன்’ தமிழ் சினிமாவின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்று. சிம்பு-முருகன் என இரண்டு பேர் சேர்ந்து இயக்கிய இப்படம் வெற்றியடைய முக்கிய காரணங்களுள் ஒன்றாக படத்தின் இசையும் பாடல்களும்தான் இருந்தன. யுவன் ஷங்கர் ராஜாவின் துள்ளல் பாடல்கள் தற்போதும் 90 ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் பாடல்களாகவும் காலர் டியூனாகவும் ஒலிக்கின்றன.
கொரோனா சூழலால் ரசிகர்கள் அதிகளவில் தியேட்டர்களுக்கு வருவதில்லை என்பதால், முன்னணி நடிகர்களின் சூப்பர் ஹிட் படங்கள் மீண்டும் தியேட்டர்களில் திரையிடப்பட்டு வருகின்றன.
விஜய்யின் ‘பிகில்’, அஜித்தின் ‘பில்லா’, கார்த்தியின் ‘ஆயிரத்தில் ஒருவன்’, தனுஷின் ‘புதுப்பேட்டை’ ஆகியவற்றைத்தொடந்து தற்போது சிம்புவின் ‘மன்மதன்’ வரும் மார்ச் மாதம் டிஜிட்டல் நவீன முறையில் மீண்டும் தியேட்டர்களில் வெளியாகவிருக்கிறது.