\
அஜித்தின் ‘ஏ.கே. 61’ அப்டேட் - வெளியான மாஸ் தகவல்

அஜித்தின் ‘ஏ.கே. 61’ அப்டேட் - வெளியான மாஸ் தகவல்

அஜித்தின் ‘ஏ.கே. 61’ அப்டேட் - வெளியான மாஸ் தகவல்
Published on

புனேவில் நடைபெற உள்ள நடிகர் அஜித்குமாரின் ‘ஏ.கே. 61’ படப்பிடிப்பில் நடிகை மஞ்சுவாரியர் கலந்துகொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’ படத்திற்குப் பிறகு ஹெச் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித், மூன்றாவது முறையாக இணைந்துள்ளப் படம் ‘ஏ.கே. 61’. போனி கபூர் இந்தப் படத்தை தயாரித்து வருகிறார். உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட வங்கி கொள்ளையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தில் நடிகர் அஜித் இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும், நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்தவருவதாகவும் சொல்லப்படுகிறது.

இந்தப் படத்திற்காக ஹைதராபாத்தில், சென்னை அண்ணாசாலையை அப்படியே பிரம்மாண்டமாக செட் அமைத்து எடுக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது படக்குழு இறுதிக் கட்ட படப்பிடிப்பு புனேவில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அடுத்தவாரம் புனேவில் படப்பிடிப்பு துவங்கவுள்ளநிலையில், நடிகை மஞ்சுவாரியார் கலந்துகொள்ள உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜூலை மாத இறுதியில் அல்லது ஆகஸ்ட் மாத முதல் வாரத்தில் படப்பிடிப்பு முழுவதையும் நிறைவு செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com